Tuesday, September 29, 2009

டாக்டரா? MLM ஏஜன்ட்டா?

நண்பர்களுக்கு வணக்கம்,

இது என்னுடைய கன்னி பதிப்பு.

கடந்த புதன் கிழமை எனது மனைவியின் தம்பி (பெயர் ராம்) உடம்பு சரியில்லாமல் எனது வீட்டின் அருகில் உள்ள கிளினிக்கிற்கு சென்று மருத்துவரை பார்த்து மருந்து வாங்கி வந்தான். மருத்துவர் அவனிடம் எங்கு தங்கி இருக்கிறாய், எங்கு வேலை பார்க்கிறாய் போன்ற சிலவற்றை விசாரித்திருக்கிறார்.


மறு நாள் எனது அபார்ட்மென்டின் செகரெட்டரி எனது வீட்டிற்கு வந்து எனது மனைவியிடம், மருத்துவர் (ராம் சென்று பார்த்த) எங்களை அவருக்கு தொடர்பு கொள்ள சொன்னதாக கூறி அவரது தொலைபெசி எண்ணை கொடுத்து சென்றிருக்கிறார். இந்த நேரத்தில் நமக்கு மனதில் சில குழப்பங்கள் வருவது இயல்புதானே!. அந்த குழப்பங்கள் எங்களுக்கும் வந்தது. பலமுறை அந்த மருத்துவரின் தொலைபெசி எண்ணுக்கு முயற்சி செய்தொம். அந்த மருத்துவர் தொலைபெசியை எடுக்கவே இல்லை. ப்றகு மாலை 5 மணி வாக்கில் அவர் எனது மனைவியின் தொலைபெசி எண்ணுக்கு பேசி எங்களை அவரது வீட்டிற்க்கு வருமாறும், எங்களிடம் பேச வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். என்ன விசயம்? எதை பற்றி என்று கேட்டதற்கு நேரில் வரும்பொது சொல்வதாக கூறி இருக்கிறார். இதை எனது மனைவி என்னிடம் கூறியபோது என்னால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.

அன்றிரவு 8 மணிக்கு நாம் எனது மனைவி மற்றும் எனது சுட்டி குழந்தை மூவரும் அந்த மருத்துவரை பார்க்க அவரது க்ளிக்கிற்கு சென்றோம். அங்கு இருந்த செவிலியரிடம் நாங்கள் மருத்துவரை பார்க்க வந்திருப்பதாக கூறினோம். அதற்கு அவர்கள் மருத்துவர் இப்பொது யாரையும் பார்க்க மாட்டார் என்றனர். அதற்கு நாங்கள் மருத்துவர் தான் எங்களை வரச் சொன்னதாக கூறினோம். அவர்கள் இன்டெர்காமில் மருத்துவரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினர். உடனே அவர்கள் எங்களை முதல் மாடியில் இருக்கும் மருத்துவரின் வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். அங்கு சென்றதும் எங்களை வரவேற்று உட்கார வைத்தனர்.

எங்களை வரச்சொன்னது ஒரு பெண் மருத்துவர், அவரது கணவரும் உடன் இருந்தார். அவரும் ஒரு மருத்துவர்தான். அவர்களின் மகன் மற்றும் மருமகள் இருவரும் மருத்துவர்கள்.

முதலில் அவர்களது குடும்பத்தை பற்றி சொல்லிய அவர், மெதுவாக விஷயத்திற்கு வந்தார். இடையிடையே எனது பையன் சேஷ்டைகளை தொடங்க அவரது கணவர் எனது பையனை அழைத்து கொண்டு வெளியே சென்றார். அவர் கூறியதாவது :

"நானும் எனது கணவரும் மருத்துவ தொழிலில் பல ஆண்டுகள் வேலை செய்து பொதிய அளவு சம்பாதித்து விட்டொம். குறிப்பிட்ட காலத்திற்கு பின் இந்த வேலை போர் அடித்து விட்டது. சில மருத்துவர்கள் மருத்துவ தொழிலை செய்து கொண்டு ரியல் எஸ் டெட் தொழிலையும் செய்வதை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். (கவனிக்க : மருத்துவ தொழிலுக்கும் ரியல் எஸ் டெட் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்?). எதற்காக அப்படி செய்கிறார்கள் என நாங்க யோசித்தும் இருக்கிறோம். அப்படி ஒரு நேரத்தில் எங்களுக்கு அறிமுகமானது தான் இந்த பிசினெஸ்"

என்று அவர் கூறியது ஆம்வே பற்றி. ஏற்கனவே நான் இதை போல் நிறைய மீட்டிங் போயிருந்ததால் அவரை இடைமறித்து நிறுத்த செய்தேன். இருந்தாலும் அவர் விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். இது ஒரு பிசினெஸ் இல்லயாம், இது ஒரு சேவையாம் (???). பேசிக் கொண்டிருக்கையில் எனது பையனை கொண்டு சென்ற அவரது கணவர் இடைமறித்தார். அவரது முகத்தில் சிறு கலவரம். நாம் யோசித்து கொண்டிருக்கையில் தொடர்ந்தார்,

"பையன் ரொம்ப செஷ்டை பண்ணவே நான் கீழே கொண்டு சென்று வண்டிகளை வேடிக்கை காட்டிக் கொண்டு இருந்தேன், சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் பையன் என் மூக்கு கண்ணாடியை பிடுங்கி எறிந்து விட்டான், ஒரு கார் அதன் மேல் ஏறி விட்டது" என்று உடைந்த கண்ணாடியை காட்டினார். முகத்தில் தோன்றிய சிரிப்பை மறைத்துக் கொண்டு பையனை அதட்டினோம். அதன் பிறகு சிறிது நேரம் ஆம்வே பற்றி பல விஷயங்களை கூறிக் கொண்டு இருந்தார். இப்பொது என் பையன் 'உச்சா' போய் விட்டான்(ஸ் நக்கி வைக்கலைங்க). பையன் சேஷ்டை அதிகமாகவே பேச்சை முடித்து கொண்டு கிளம்பினோம்.

மருத்துவர்கள் இன்னொரு தொழிலில் ஈடுபடுவது தவறு என்று சொல்வது இந்தப் பதிவின் நோக்கமல்ல. அவரவர் வருவாயைப் பெருக்கிக் கொள்ள அவரவர்க்கு உரிமை உண்டு. மேலே கூறிய சம்பவத்தில் எனக்குள் தோன்றிய சில கருத்துகளை இங்கே உங்கள் முன் வைகிறேன்.


1.உடம்பு சரியில்லை என்று நாங்கள் செல்ல,இந்த டாக்டர்-நோயாளியின் உறவை தமக்கு சாதகாமாகப் பயன்படுத்தி பணம் பறிப்பது சரியா?

2. மருத்துவருடைய இரண்டாம் தொழிலான MLM வாடிக்கையாளருக்கு முதல் சலுகை அளித்து, நோயாளிக்கு பிசி யாக இருப்பதாக கூறி பார்க்க மறுத்து விடுவது சரியா?

3. ஒரு மருத்துவர் எனது அபார்ட்மென்டின் செகரெட்டரியிடம் சொல்லி எங்களை பேச சொன்னது எங்களுக்குள் சிறிய அளவில் பயத்தை ஏற்படுத்தவே செய்தது.

4. அவருக்கு முதல் நிலை தொழில் போர் அடிப்பதால் இரண்டாம் நிலை தொழிலில் இறங்கியதாக கூறினார் (கவனிக்க : இந்த தொழில் செய்தால் நல்ல காசு வரும் என்பதை அவர் சொல்லவே இல்லை, மாறாக இது ஒரு சேவை என்றார். அப்படி என்றால் தொண்டு நிறுவனங்கள் செய்வது எல்லாம்??).

5. என்னுடைய கணிப்பின் படி அவருக்கு மருத்துவ தொழில் தற்போது அவ்வளவு விருப்பம் இல்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக க்ளினிக் போர்டை இன்னும் கழட்டாமல் இருக்கிறார்.

இது போன்ற பல கேள்விகள் உங்களுக்குள்ளும் எழலாம், அப்படி இருப்பின் அதை பதிவு செய்யவும். மேலும் இந்த மாதிரியான மருத்துவர்களை என்ன செய்யலாம்? இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருப்பின் அதை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்.


25 comments:

Ganesh said...

Now a days MLM is a fashion. All peoples are doing this business in the name of service. Not only the doctors, other peoples are also doing. If you are not interested, straight away tell them that i am not interested boss.

Karthik said...

People who are in this business should not force and disturb others to buy or getting them involved.
Moreover a doctor should not have gone to this extent.
The little cute boy did a fantastic job, though it's an accidental happening.

Anonymous said...

மருத்துவம் என்பது “மகத்தான சேவை” அதை அவர்கள் மனதில் உணர்ந்து செய்யும் போது தான் நோய்கள் குணமாகும்.பணம் தான் குறிகோள் என்றால் அதற்கு வேறு பல தொழில்கள் இருக்கு...
நோயாளிகளின் அட்ரஷ் தெரிந்து அதன் முலம் தனது MLM தொழிலை செய்யும் பிறாடு டாக்டரை எல்லாம்.....உங்க பையன் style தான் டீல் பண்ணனும்.
உங்கள் கருத்து பணி சிறக்க வாழ்த்துகள்......
என்றும் உஙகள்...
ந.நிருபன்.

கபிலன் said...

முதல் பதிப்பு அருமை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!

chennailocal said...

வாருங்கள் நண்பர் குணா அவர்களே,
உங்கள் முதல் பதிப்பு மிகவும் நன்றாக உள்ளது.

பரவாய்ல்லை , Treatment முடிச்ச பிறகு சொன்னாரு. கொஞ்சம் யொசித்து பாருங்கள் வெற எதாவது மருந்து கொடுக்காம

சரி இனிமேல் அந்த டாக்டர் கிட்ட போகாதிங்க.

Anandha Prabu said...

guna check weather he completed the MBBS.. During the first year racking seniors will change the juniors to understand what is diginity in medical... i strongly doubt that he studied MBBP..

Unknown said...

yenda doctorta ponen avar MLM Market panninaarnu solurathuku ivvalavu periya kathiya????

Cinemavuku kathai yelutha poo... Antha thiramai iruku.....

நாமக்கல் சிபி said...

Good Post!

puduvaisiva said...

நல்வருகை குணா

கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் ஆன் லைன் புகார் விண்ணப்பத்தின் மூலம் அந்த மருத்துவரை பற்றிய புகார் தரவும், உரிய நடவடிக்கை அரசு மேற்கொள்ளும்.

முதலில் நீங்கள் வசிக்கும் பகுதியை தேர்வு செய்யவும்.

http://www.tn.gov.in/services/GDP/index.asp

http://chennaigdp.tn.nic.in/online/

Guna said...

//Ganesh said...
Now a days MLM is a fashion.//

மருத்துவர்கள் இன்னொரு தொழிலில் ஈடுபடுவது தவறு என்று சொல்வது இந்தப் பதிவின் நோக்கமல்ல. அவரவர் வருவாயைப் பெருக்கிக் கொள்ள அவரவர்க்கு உரிமை உண்டு.

என்பதை இந்த பதிப்பில் நான் கூறி இருக்கிறேன்.

மேலும் அந்த மருத்துவரும் இதை பற்றி அவர் எண்ணுக்கு நாங்கள் தொடர்பு கொள்ளும்போதே சொல்லி இருக்கலாமே? அப்படி சொல்லி இருந்தால் நாங்களும் நேரடியாக சொல்லி இருப்போம்.

உங்கள் பதிவிற்கு நன்றி.

Guna said...

//
Karthik said...
People who are in this business should not force and disturb
//

உங்கள் பதிவிற்கு நன்றி.

Guna said...

//

கபிலன் said...
முதல் பதிப்பு அருமை. தொடர்ந்து எழுத

//

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

Guna said...

//
உங்கள் கருத்து பணி சிறக்க வாழ்த்துகள்......
என்றும் உஙகள்...
//

உங்கள் பதிவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நிருபன்.

Guna said...

//
chennailocal said...
வாருங்கள் நண்பர் குணா அவர்களே, //

மிக்க நன்றி நண்பரே.

Guna said...

//
நாமக்கல் சிபி said...
//

தங்கள் வருகைக்கு நன்றி.

Guna said...

//
♠புதுவை சிவா♠ said...
நல்வருகை குணா
//

உங்கள் கருத்துக்கும், கூறிய யோசனைக்கும் நன்றி. முயற்சி செய்கிறேன்.

காரணம் ஆயிரம்™ said...

இவர்களுக்கெல்லாம் ஒரு பொதுவான குணம் உண்டு... அது மற்றவர்களை உயர்வாகப்பேசி உறுப்பினராக ஆக சம்மதிக்க வைப்பது.. என்னைக்காண வந்த ஒரு MLM-க்காரர், புத்தக ஷெல்ஃபில் இருந்த Dale Carnegie, You Can Win எல்லாம் பார்த்துவிட்டு, ‘என்னவொரு புத்திசாலித்தனம் !!!’ எனப்பூரித்துப்போனார்.. இந்த சேவைக்குத்தகுந்த சரியான (?!) ஆளை அவர் கண்டுகொண்டதாக தெரிவித்தார்.. நான் வேலை தேடிக்கொண்டிருந்த சமயமாதலால், ‘என்னால் இப்பொழுது பணம் தரவியலாது.. அதனால், நீங்களே எனக்காக பணம்கட்டி பதிவு செய்து தாருங்கள்.. பிற்பாடு, எனக்கு கிடைக்கிற லாபத்தில், ஒரு பங்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்றேன்.. அவ்வளவுதான்.. சட்டென முகம்மாறி ஒன்றும் சொல்லாமல் எழுந்துபோய்விட்டார்.. வேலைகிடைத்தபிறகும் இதே டெக்னிக்கைத்தான் பின்பற்றுகிறேன்..

இது எப்படியிருக்கு???

Guna said...

//
காரணம் ஆயிரம்™ said...
இவர்களுக்கெல்லாம் ஒரு பொதுவான குணம்
//

தங்கள் வருகைக்கு நன்றி.

venkat said...

hkghh

Anonymous said...

Boss, it is a wild world ppl will do anything for money :-)

Rajaram

Anonymous said...

Hi maamu,

Welcome to blogspot world!!!!!! Keep posting....

- Gugs.

Vijay said...

முதலில் இந்த ஆம்வேயை தடை செய்தால் நாடு உருப்புடும் :-)

Pushparaj Kamaraj said...

Ennna koduma saravanan ithu !!!!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

Hai friends!!!!!! Don’t forget to give us a booking with any plumbing or other related home repair services..
Services: Water tap repair and replace, Pipeline blockage and leakage repair, Toilet basin repair, pvc pipe repair,kitchen pipe blockage,water jet pump repair,pipe drainage etc.,
Plumbing
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

Post a Comment